தேவியின் தேன்சிட்டு
தேவியின் தேன்சிட்டுக்குருவி-1: தேவி,8 வயது சிறுமி அவள். எப்பொழுதும் அவளுடைய தேடல் எல்லாமே குளத்து மீன்களும், குருவின் முட்டைகளும் தான்.அப்போழுது அரையாண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன.அவளோ மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருந்தாள். தேர்வை நினைத்து அல்ல. தேர்வு முடிந்து வரும் விடுமுறையை நினைத்து. அதுவும் ஜனவரி மாத விடுமுறைக்காக அவள் எப்பொழுதும் காத்துக்கொண்டு இருந்தாள். மற்ற எல்லா விடுமுறைகளை விட இந்த அரையாண்டு விடுமுறை தான் அவளுக்கு மிகவும் பிடித்தது ஏனென்றால் அப்பொழுதுதான் வாய்க்கால் நீர் வற்றி ,குட்டைகளில் குறவை மீன் களையும் ,சிறுகெண்டை மீன்களையும் பிடிக்க முடியும் .நெல் வயல்களில் அறுவடை முடிந்ததது. புதர்களிலும் மரக்கிளையும் தொங்கிக் கொண்டிருக்கும் கூடுகளை எட்டிப்பார்த்து அதிலுள்ள முட்டைகளைப் எண்ணி எண்ணி பார்த்து அகமகிழும் முடியும். அந்த முட்டைகள் குஞ்சு பொரிந்தது கேட்கும் கீச்சு கீச்சு சத்தம் அலாதியானது. தேர்வும் முடிந்து, எதிர்பார்த்த விடுமுறையும் வந்தது.அன்று காலையில் துணி காயப்போட கொடியை நாடிச் சென்றாள். அதில் வெங்காய தோல் போன்று ஏதோ ஒட்டி இருந்தது .ஏதோ...